

சென்னை: மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இதை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
இந்த சட்டதிருத்தத்தில், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதன்படி இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.