மின் கட்டண உயர்வு: சென்னை, மதுரை, கோவை நகரங்களில் கருத்துக் கேட்பு கூட்டம்

மின் கட்டண உயர்வு: சென்னை, மதுரை, கோவை நகரங்களில் கருத்துக் கேட்பு கூட்டம்
Updated on
1 min read

சென்னை: மின் கட்டண உயர்வு தொடர்பாக 3 நகரங்களில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை ஆணையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 3 இடங்களில் இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதன்படி கோவையில் வரும் 16ஆம் தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியிலும், மதுரையில் 18ஆம் தேதி தள்ளாக்குளம் லட்சுமி சுந்தரம் அரங்கிலும், சென்னையில் 22ஆம் தேதி கலைவாணர் அரங்கிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மின்சார ஒங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தவுடன் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in