விழுப்புரம் அருகே சுவரில் கார் மோதி 3 இளைஞர்கள் பலி

விழுப்புரம் அருகே சுவரில் கார் மோதி 3 இளைஞர்கள் பலி
Updated on
1 min read

வீட்டின் சுவர் மீது கார் மோதி விபத்துக் குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந் தனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(23), தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல, நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி(24), வினோத்(23), தனசேகர், ஆயிரம்விளக்கைச் சேர்ந்த ஜாக்சன், மோஸஸ், மணிகண்டன், தி.நகரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோரு டன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் சென்றுகொண்டு இருந் தார். ராஜேஷ்குமார் காரை ஓட்டினார்.

நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கோட்டைமேடு என்ற இடத்தில் வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடியது. அப்போது நாய் மீது மோதாமல் இருக்க காரை வலது பக்கம் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த வீட்டின் சுவரில் மோதிவிட்டு அதன் அருகில் இருந்த வேன் மீதும் மோதியது.

இந்த விபத்தில் ராஜேஷ்குமார், மூர்த்தி, விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்ற அனைவரும் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in