1500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா: வெளிநாடுகளில் கொள்முதல் செய்ய திட்டம்

1500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா: வெளிநாடுகளில் கொள்முதல் செய்ய திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் கேமராக்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு கருதி நிர்பயா திட்டத்தின்கீழ் 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது.

ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கேமரா, அவசர அழைப்பு பொத்தான், வீடியோ ரெக்கார்டர் ஆகியனபொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கேமரா பொருத்தப்பட்ட 500 பேருந்துகளை கடந்த மேமாதம் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

இதன்பிறகு தற்போது வரைமொத்தமாக 1,000 பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக கூடுதலாக தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பம்கொண்ட கேமராக்களை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in