Published : 04 Oct 2016 09:26 am

Updated : 04 Oct 2016 09:57 am

 

Published : 04 Oct 2016 09:26 AM
Last Updated : 04 Oct 2016 09:57 AM

கர்நாடக ஆளுங்கட்சியாக இருந்து காவிரியை திறக்க மறுக்கும் காங்கிரஸுடன் கூட்டு வைப்பதா?- கருணாநிதிக்கு டி.ராஜேந்தர் கேள்வி

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அத்தகைய காங்கிரஸ் கட்சியுடன் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டு வைத்துள்ளது என்று லட்சிய திமுக நிறுவனர் டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார்.

தமிழக முதல்வர் ஜெயலலி தாவின் உடல்நிலை சரியில்லாத தால் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று டி.ராஜேந்தர் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில், தனது பிறந்த தினமான நேற்று சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக் குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல்நலம் சரியில்லாததால், ரசிகர்களை சந்திக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால் பிறந்தநாள் கொண்டாடவில்லை.

கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசுதான் தற்போது காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அந்த காங்கிரஸ் கட்சியோடு உள்ளாட்சி தேர்தலில் கூட்டு வைத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. காவிரி நீர் பிரச்சினையிலும் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கர்நாடக ஆளுங்கட்சிகாவிரியை திறக்க மறுக்கும் காங்கிரஸ்கருணாநிதிடி.ராஜேந்தர் கேள்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author