

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.தாரணி, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதி கே.சிவக்குமார், விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், கோவை வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஸ்ரீனிவாசன், திருவாரூர் மாவட்ட நீதிபதியாகவும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.முரளிசங்கர் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட சிறப்பு அமர்வு நீதிபதி டி.பாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதியாகவும், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும் நேற்று இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.