

ஜிஎஸ்டி சட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல் படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தமிழ்நாடு அனைத்து தொழில் வணிக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
மத்திய அரசு 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல் படுத்துவதாக அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எந்த வகையிலும் சிறிய, நடுத்தர வணிகர்களை பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது. ஜிஎஸ்டி சட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
சிறிய, நடுத்தர வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு விற் பனை வரி விலக்கு வரம்புத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தித் தர வேண்டும்.
ஜிஎஸ்டியில் வர விரும்பாத சில்லரை வணிகர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உட்பட்டு இணக்கவரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண் டும். இதற்கு எந்தவிதமான உச்ச வரம்பும் இருக்கக் கூடாது. ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளீட்டு வரிகளைப் பெறுவதிலும், கணக்குகளை தாக் கல் செய்வதிலும் எளிமையான விதிமுறைகளை அமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.