

பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை அடிப்படையாகக் கொண்ட ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தீபாவளி திருநாளான இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிறப்புப் பாடல்கள் இடம்பெறும்.
இதில் முத்துசுவாமி தீக்ஷிதர் இயற்றியுள்ள அன்னபூரணி, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட சில கிருத்திகள் ஒளிபரப்பாகும். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்பதால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு இன்று இரவு ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலான அடுத்த வாரம் சனிக்கிழமை 58 வது அத்தியாயமாக எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் வாழ்க்கைப் பயணம் குறித்த நிகழ்ச்சி மற்றும் பாடல்கள் வழக்கம்போல் இடம்பெறும்.
இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி யின் மறு ஒளிபரப்பை செவ்வாய் இரவு 9.30 மணிக்கு காணலாம்