

திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களும் பலரும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி குறித்து புகழஞ்சலி பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.