தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8-ம் தேதி மிதமான மழையும் பெய்யக் கூடும்.

9, 10-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in