வ.உ.சிதம்பரனாரின் பேரன் மரணம்

வ.உ.சிதம்பரனாரின் பேரன் மரணம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் பேரன் உலக நாதன்(72) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

வ.உ.சி.யின் மகன் ஆறுமுகத் தின் மகன் உலகநாதன். விளாத்தி குளம் அருகே சின்னூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உலகநாதன், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தூத்துக்குடி அரசு மருத் துவமனையிலும் அனுமதிக் கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.

இவரது மகள் செல்வி கோவில்பட்டியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகவும், மகன் கண்ணன் தூத்துக்குடியில் தலைமைக் காவலராகவும், மற்றொரு மகன் குமார் தலைமைச் செயலகத் தில் ஓட்டுநராகவும் பணியாற்று கின்றனர்.

உலகநாதனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு நேற்று மாலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்

வ.உ.சிதம்பரனாரின் பேரன் உலகநாதன் மறைவுக்கு தலைவர் கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருநாவுக்கரசர்:

விடுதலைப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன் உலகநாதன் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந் தேன். காங்கிரஸ் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றிவந்த உலகநாதனின் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்:

தியாகி வ.உ.சிதம்பரனாரின் பேரன் உலகநாதன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரமுற்றேன். நான் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வ.உ.சி.யின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவர் வாழ்ந்த தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்துக்கு வ.உ.சி. துறை முகம் என்று 2011-ல் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்தேன். அந்த விழாவில், அவரது பேரன் உலகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.சி.சண்முகம்:

விளாத்திக் குளத்தில் வாழ்ந்து வந்த கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சியின் பேரன் உலகநாதன் தனது 75 வயதில் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு புதிய நீதி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கவனித்து அவர்களின் துன்பங் களை மத்திய மாநில அரசுகள் களைவது தான் நாட்டு விடு தலைக்கு பாடுபட்டவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in