Published : 10 Oct 2016 10:02 AM
Last Updated : 10 Oct 2016 10:02 AM

தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்: கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தாய்மொழி அல்லது பிராந்திய மொழி மட்டுமே கல்வி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனத்தை கேரள மாநிலத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளி யிட, ஆந்திராவைச் சேர்ந்த கல்வியாளர் வி.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சி யில் எம்.ஏ.பேபி பேசியதாவது:

மாற்றுக் கல்வி கொள்கைக்கான மக்கள் சாசனம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் விவாதங்கள் நடைபெற வேண்டும். எனது சார்பாக கேரளா, திரிபுரா மாநில கல்வி அமைச்சர்களிடம் இதுகுறித்து எடுத்துக் கூற வுள்ளேன். இதேபோன்று அனைத்து மாநில கல்வி அமைச்சர் களிடமும் மாற்றுக் கல்விக் கொள்கையினை கொண்டு செல்ல வேண்டும். புதிய கல்விக் கொள் கையானது வணிக மையம், வகுப்புவாதம், அதிகாரத்தை மையப்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்தியாவில் கல்வி வணிக மயமாக்கப்பட்டதோடு, அதை வணிகப்பொருளாக அறிவிக்க உலக வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் வெளியிடப்பட்ட மக்கள் சாசனத்தில், “அனைத்து குழந்தைகளுக்கும் 18 வயதுவரை, சிறந்த தரமுடைய கல்வியை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், கல்விக்கான முழு நிதியையும் அரசே செலவழிக்க வேண்டும். தாய் மொழி அல்லது பிராந்திய மொழி ஒன்றே பயிற்று மொழி யாக இருக்க வேண்டும். உயர் கல்வி அனைவரின் உரிமை, வசதி உடையவர்களுக்கு மட்டு மல்ல, என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர் கல்வியிலும், பயிற்சி யிலும் இந்தியா மிகவும் பின்னடைவு பெற்றிருக்கிறது. எனவே, ஆசிரியர் கல்வியை வலிமைப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட யோசனைகள் மாற்று கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாநாட்டில், மாற்றுக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு தலைவர் வே.வசந்திதேவி, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் அமைப்பாளர் என்.மணி, பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x