சேலம், நாமக்கல், தருமபுரி, ஓசூர் வழியாக ராமேசுவரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், நாமக்கல், தருமபுரி, ஓசூர் வழியாக ராமேசுவரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
Updated on
1 min read

சேலம், நாமக்கல், தருமபுரி, ஓசூர் வழியாக, ராமேசுவரம்- ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை, இரு மார்க்கத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ராமேசுவரம்- கர்நாடகாவின் ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஹாவேரி, ரானிபென்னூர், ஹரிஹார், தாவணகரே, சிக்ஜாபூர், பீருர், அர்சிகரே, தும்கூர், யெஷ்வந்தத்பூர், ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இயக்கப்படுகிறது.

அதன்படி, ஹூப்ளி- ராமேசுவரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயிலானது (எண்-07355), நேற்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

இந்த ரயிலானது, ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, சேலம் இரவு 7.50, நாமக்கல் இரவு 8.44, கரூர் இரவு 9.58 மணிக்கு வந்தடைந்து, மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், ராமேசுவரம்- ஹூப்ளி இடையிலான வாராந்திர சிறப்பு ரயிலானது (எண்-07356), இன்று (7-ம் தேதி) முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது,ராமேசுவரத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை கரூர் 3.48, நாமக்கல்4.19, சேலம் 5.45 மணிக்கு வந்தடைந்து, ஹூப்ளிக்கு இரவு 7.25 மணிக்குச் சென்றடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in