2 நாட்களாக வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்: பாபநாசம் பகுதி விவசாயிகள் கவலை

பாபநாசத்தை அடுத்த கூடலூாில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
பாபநாசத்தை அடுத்த கூடலூாில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
Updated on
1 min read

பாபநாசம் வட்டத்தில் 150 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள்2 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், கரையோரங்களில் உள்ள கோவிந்தநாட்டுச்சேரி, வாழ்க்கை, கூடலூர், அணக்குடி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் தென்கரை படுகையில் 150 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கீரை வகைகள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும், படுகையிலுள்ள 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கூடலூர், பட்டுக்குடி கிராமங்களில் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அக்கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடந்த 2 நாட்களாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: கொள்ளிடம், காவிரி, மண்ணியாறு படுகைகளில் அனுமதியின்றி செங்கல் சூளைக்காக மண்ணை எடுப்பதால், ஆற்றில் செல்லும் தண்ணீர், மண் எடுத்த பகுதியில் புகுந்து விடுகிறது. இதனால், படுகையின் ஓரத்தில் சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. எனவே, உரிய அனுமதியின்றி செங்கல் சூளை அமைத்தாலோ, அனுமதியின்றி மண் எடுத்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in