

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருநங்கை ஒருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளியைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி (65). திருநங்கையான இவர், விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். நேற்று விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அவர், பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுவை உதவித் தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இவர் கூறுகையில், “சின்னபேராளி கிராமத்தில் நான் கூலி வேலை செய்து வருகிறேன். கிராம மக்கள் என் மீது அன்பும் பாசமும் கொண்டுள்ளனர். அவர் களின் வற்புறுத்தல் மற்றும் அன்பாகக் கேட்டுக்கொண்டதால் ஊராட்சிமன்றத் தலைவர் பத விக்குப் போட்டியிடுகிறேன். கிராம மக்கள் அனைவரும் என க்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்.நான் வெற்றிபெற்றதும் கிராமத்தில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.