

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சேர்ந்த வர் அருள் ஜார்ஜ் சைமன்(37). தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கணக்கராகப் பணி புரிந்தார். கடந்த 20.4.2014 அன்று, தஞ்சாவூர் காவேரி நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் சைமன் மது அருந்திக்கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு மது அருந்த வந்த இனாத்துக்கான்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(27), தன் ராஜ்(36) ஆகியோர், சப்ளையர் ராஜேந்திரனை கிண்டல் செய் துள்ளனர். இதை சைமன் தட் டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த செல்வக்குமார், தன்ராஜ் ஆகியோர், தங்களது நண்பர்கள் அறிவழகன்(26), லட்சுமணன்(26), அறிவழகனின் சகோதரர் பிரபு(28) ஆகியோரை வரவழைத்து, டாஸ் மாக் கடையில் இருந்து வெளியே வந்த சைமனை, 5 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து, தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.