Published : 06 Aug 2022 08:06 PM
Last Updated : 06 Aug 2022 08:06 PM

தமிழகத்தில் தொடர் மழை: நோய்ப் பரவல் தடுப்புப் பணிகளுக்கு அமைச்சர் உத்தரவு 

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மருத்தவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சித்லைவர்கள் மற்றும் வருவாய், ஊரக வளாச்சி, உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களுக்கு கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுகூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.

4-ம் தேதி பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் தலைமையில் அனைத்து மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகளுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அக்கூட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களுக்கு இன்று தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 11-ம் தேதியன்ற மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவில் உள்ள மருத்துவ துறை சார்ந்த இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆணையர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் ஆய்வுகூட்டம் நடைபெற உள்ளது.

தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட அளவில் போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x