சின்னசேலம் தனியார் பள்ளியில் இருந்து 180 மாணவர்கள் வெளியேற முடிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சின்னசேலம்: வன்முறைக்குள்ளான சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்த 2,000 மாணவ, மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க முடிவு செய்து விண்ணப்பித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஒருவர் மர்மமான முறையில் கடந்த மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக பள்ளியில் நிகழ்ந்த வன்முறையில் பள்ளிக் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன.

இதனால் பள்ளியில் படித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது. மாணவி உயிரிழந்த 13-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, ஆகஸ்ட் 1 லிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை வேறொரு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 350-க்கும் மேற் பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வரை 2,000 மாணவ மாணவிகள் தங்களுடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டும், சாதி சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக, 180 மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பள்ளிகளில் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in