

உள்ளாட்சி தேர்தலுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கலின்போதே லட்சக்கணக்கில் செலவு செய்த வேட்பாளர்கள் பலர் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்த பட்ச செலவுத்தொகையை தேர்தல் ஆணையம் நிர்ணயித் துள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.1.7 லட்ச மும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் களுக்கு ரூ.85 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ.34 ஆயிரம் என செலவு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சிலர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே தேர்தல் விதிகளை காற்றில் பறக்கவிட்டு ரூ.ஒரு லட்சம், ரூ.2 லட்சம் என செலவு செய்துள்ளனர். பலர் பேருந்துகளில் தங்கள் ஆதர வாளர்களைப் புடை சூழ அழைத்து செல்வது, அவர் களுக்கு பிரியாணி, மதுபாட்டில் கள் வாங்கித் தருவது என பல்வேறு வகையில் செலவுகளை வாரி இறைத்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் பகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களிடம் விசாரித்தபோது பலர் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலை யில் உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் வரம்பின்றி செலவு செய்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே விதிகளை மீறி பணத்தை வாரி இறைப் பவர்களுக்கு இது ஒரு பாடம் என்றும் அடுத்த முறை இது போல் செலவு செய்வதற்கு அஞ்சுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.