

சென்னை: ஐஎஃப்எஸ் நிதி நிறுவன நிர்வாகிகள், ஆடிட்டரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஐஎஃப்எஸ்) என்ற நிறுவனம், வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
‘ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி கிடைக்கும்’ என்று கூறி, தமிழகம் முழுவதும் ஏராளமானோரிடம் பல கோடி ரூபாயை இந்நிறுவனம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், வேலூர்சத்துவாச்சாரியில் நிர்வாகி ஜனார்த்தனன் வீடு, செங்காநத்தத்தில் சுகுமார் என்பவரது வீடு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலியில் நிர்வாகிகளின் வீடுகள், கோவை சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையத்தில் ஆடிட்டர் வெண்ணிலாவீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
வேலூர் வி.ஜி.ராவ் நகரில் நிர்வாகி லட்சுமி நாராயணனின் வீட்டில் யாரும் இல்லாததால்,அந்த வீட்டுக்கு வருவாய்த் துறையினர் உதவியுடன் போலீஸார்சீல் வைத்தனர்.
அரக்கோணம்வெங்கடேசபுரத்தில் மோகன்பாபுஎன்பவரது வீட்டில் யாரும் இல்லாததால், வருவாய்த் துறையினர்முன்னிலையில் போலீஸார், கடப்பாரையால் கதவை உடைத்து சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ளஅலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
பூக்கடைச்சத்திரம் அருகே உள்ள அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.