

சென்னை: மாணவர்கள் வேலை தேடுபவர் களாக இல்லாமல் தொழில் முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி கல்வி நிறு வனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) 12-வதுபட்டமளிப்பு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடை பெற்றது.
இந்த விழாவுக்கு பல்கலை. வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார். மொத்தம் 4,829 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 68 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
இதுதவிர பட்டமளிப்பு விழாவில் பாபாஅணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குநர் எஸ்.சங்கர், கிரிக்கெட் வீரர்சுரேஷ் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத்தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு தங்கள் துறைகளில் சிறந்து விளங் கியதற்காக பல்கலைக்கழகம் சார் பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங் கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை: பட்டம் பெறும்மாணவர்கள் தற்போது வாழ்வின் முக்கியமான காலக்கட்டத்தில் நுழைய உள்ளீர்கள். இனி மிகக் கவனமாக சிந் தித்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். நம்நாடு இன்றைய இளைஞர்களின் மீது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
தற்போது உலகளவில் இந்தியா பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப் பாக, பொருளாதார வளர்ச்சியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
இந்நிலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல மாணவர்களின் பங்களிப்பு அவசியம். உலகில் பல்வேறு நாடுகளைவிட வேகமாக தடுப்பூசியை கண்டறிந்து கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தோம். அதனுடன் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம். இதுதான் புதிய இந்தியா.
உலகை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக பருவநிலை மாற் றம் உள்ளது. இதை சரிசெய்ய உலக நாடுகளை ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதே போல், சூரிய சக்தி பயன்பாடு உட்பட பல்வேறு செயல்பாடுகளையும் செயல்படுத்தி வருகிறோம்.
பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கள் கிடைத்துவிடாது. எனவே, இளைஞர்கள் வேலை தேடுபவர் களாக இல்லாமல் தொழில் முனை வோராக தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இதற்கு சாதகமான சூழல் தற்போது நிலவு கிறது. மத்திய அரசின் நிதி ஆயோக் உட்பட பல்வேறு அமைப்புகள் தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகள், நிதியுதவிகள் வழங்குகின்றன.
வாழ்வில் கடின முடிவுகளை மேற்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். உங்கள் கனவுகளை நோக்கி உறுதி யுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம். நம்நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வரு கிறோம்.
இதன் மகத்துவத்தை இன்றைய இளைஞர்கள் பலர் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் எல்லாரும் சுதந்திர இந்தியாவில் பிறந்துள்ளீர்கள். 1950-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் முழுமையாக தெரியும். சுதந்திரத்துக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தியாகிகள் பல்வேறு அரும்பெரும் செயல்களை செய்துள்ளனர்.
அவற்றை இன்றைய இளை ஞர்கள் நினைத்துப் பார்த்து, சுதந்தி ரம் பெறக் காரணமாக இருந்த தியாகிகளை போற்றுவது அவசிய மாகும். இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாட வேண்டும்.
2047-ல் இந்தியாவை உலகின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர நாம் ஒருங்கிணைந்து பயணி யாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத் தில் பல்கலை. துணைவேந்தர் ச.மன் நாராயணன் ஆண்டறிக் கையை வெளியிட்டு வரவேற்புரை யாற்றினார். விழாவில் பல்கலை. இணைவேந்தர்கள் ஏ.ஜோதி முருகன், ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக் குழும துணைத் தலைவர் பிரித்தா கணேஷ், பதிவாளர் பெ.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.