

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித் திருந்தார்.
மு.க.ஸ்டாலின், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்த ரசன், திருமாவளவன், ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ரயில் மறியலில் பங்கேற்று கைதா னார்கள். ஆனால், திருநாவுக் கரசர் கடந்த 16-ம் தேதி இரவே டெல்லி சென்றுவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன் னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களில் 90 சதவீதத்தினர் ரயில் மறியலில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களிடம் பேசியபோது, ‘‘ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என திருநாவுக்கரசர் அறிவித்திருந் தார். ஆனால், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் களுக்கு முறைப்படி எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைமை யும், மாவட்டத் தலைவர்களும் செய்யவில்லை.
இதனால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டதால் ரயில் மறியலில் பங்கேற்கவில்லை’’ என்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு திமுக - காங்கிரஸ் இடையே உரசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது, இரு கட்சிகளின் உறவில் தொடரும் சிக்கலையே வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசரிடம் கேட்டபோது, ‘‘தமிழ் நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத் திருந்த ரயில் மறியல் போராட் டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என அறிவித்திருந்தேன். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண் டர்களும் பங்கேற்றனர். போராட் டங்களில் பங்கேற்று ஆயிரக் கணக்கான காங்கிரஸார் கைதாகியுள்ளனர். புறக்கணிப்பு என்பதெல்லாம் இல்லை’’ என்றார்.