ஜெ. குணமடைய பால்குட ஊர்வலம்: அதிமுக தொண்டர் உயிரிழப்பு

ஜெ. குணமடைய பால்குட ஊர்வலம்: அதிமுக தொண்டர் உயிரிழப்பு
Updated on
1 min read

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது.

நெய்க்காரப்பட்டி அம்மன் கோயிலில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில், ஊர்வலத்தில் கலந்துகொண்ட 55 வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த வரின் பெயர், முகவரி உட்பட எந்த விவரமும் உடனடியாக தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பால்குட ஊர்வலத் தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in