Published : 05 Aug 2022 09:32 PM
Last Updated : 05 Aug 2022 09:32 PM

மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை: ஆவின் விரைவில் அறிமுகம்

சென்னை: மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களின் பணிகள் மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகள் விற்பனை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
  • நீண்ட கால நிலுவையில் உள்ள தணிக்கை குறைகளின் மீது அனைத்து ஒன்றியங்களும் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பால் கொள்முதல் குறைவாக உள்ள இடங்களில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் மையங்கள முதல் விற்பனை மையங்கள் வரை நேரில் சென்று களப்பணியாற்ற வேண்டும்.
  • தமிழ்நாடு முழுவதும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனையை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • தீபாவளி சிறப்பு இனிப்புகள் விற்பனை தயாரிப்பிற்க்கு தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் ஆகிவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு தயாரிப்பு பணிகளை தொடங்க வேண்டும்.
  • ஆயுத பூஜைக்கான சிறப்பு இனிப்புகள் விற்பனையை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.
  • இலக்கான ரூபாய் 200 கோடி விற்பனையை அடைய அனைத்து விற்பனை யுக்திகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கு தேவையான இனிப்புகளுக்கான கொள்முதல் ஆணை பெற முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
  • சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பால் உபபொருட்கள், அனைத்து இடங்களிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x