

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவையில் 10 முதல் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதன்படி, நீலகிரி மற்றும் கோவையில் 10 முதல் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்ட அவலாஞ்சியில் 20 செ.மீ, தேவலாவில் 18 செ.மீ, நடுவட்டத்தில் 15 செ.மீ, மேல் பவானியில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கோவையின் சின்னகல்லாரில் 19 செ.மீ, சேலையாறில் 13 செ.மீ, வாள்பாறையில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது.