ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஜாமீனில் விடுதலை

ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஜாமீனில் விடுதலை
Updated on
1 min read

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறை அதிகாரி வருண் குமார் மீது சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

“ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி காலத்தில் என்னை காத லித்த வருண்குமார் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித் தார். அவர் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரியான பின்னர் அதிக வரதட்சணை கேட்டு என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்” என்று பிரியதர்ஷினி புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வருண்குமார் சரணடைந்தார். அவர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார். இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் வருண்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், நிபந்தனைகளின் அடிப்படையில் வருண்குமாரை ஜாமீனில் விடுதலை செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப் படும் வரை சம்பந்தப்பட்ட புலன் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருண்குமார் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையையும் நீதிபதி விதித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in