Published : 05 Aug 2022 07:50 AM
Last Updated : 05 Aug 2022 07:50 AM

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு

சென்னை: அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் நவம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.

8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்கேற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம், ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் பெயரைபதிவு செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்), புனிதஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600 009 என்றமுகவரியிலோ, 044–2567 4924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சென்னைராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x