

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல் லாமலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க முடியும் என்று, தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத் தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எஸ்.குணபாலன், துணைத் தலைவர் சண்முகசுந்த ரம், செயலாளர் என்.மாதவ ராஜ், பொருளாளர் ராஜமன்னார், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் திருநெல் வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956-ன் உள்பிரிவு 6-ன் படி மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை 2.6.1990-ல் அமைத் தது. இதன் உள்பிரிவு 6 ஏ (1) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வழிவகை செய் கிறது. நாடாளுமன்றம்தான் மேலாண்மை வாரியத்தை அமைக்க அதிகாரம் பெற்றது என்பது இல்லை. நடுவர்மன்ற தீர்ப்பு இந்திய அரசிதழில் அறிவிக் கையாக வெளியிட்டபின் அத் தீர்ப்பை மாற்ற நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் வாய்ப்பு இல்லை.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 5.2.2007-ல் அரசுக்கு அளிக் கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பின் 19.2.2013-ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அரசிதழில் வெளியிட்டதால் நடுவர்மன்ற அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவே பொருள்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி அமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை நாடாளுமன்றத் துக்கு அனுப்பாமலேயே 1980 டிசம்பரில் மத்திய அரசு அமைத்திருக்கிறது. உண்மை நிலை இப்படி இருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கடந்த 1973 முதல் 1980 வரை கர்நாடக அரசானது காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் 5 அணைகளை கட்டி 70 டிஎம்சி காவிரி நீரை தடுத்து வைத்துள் ளது. இது காவிரி நதி ஒப்பந்தத் துக்கு எதிரானது.
எனவே உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் அமைத்து தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது என்ற னர்.