Published : 05 Aug 2022 07:43 AM
Last Updated : 05 Aug 2022 07:43 AM

முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 1,030 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவை ஜூலை 4-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. இது தேர்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x