500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்க அரசு திட்டம்

500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்க அரசு திட்டம்
Updated on
1 min read

500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது 500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) டெண்டர் விட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மின் வாரியம். 500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க முடிவு செய்துள்ளது. ஒரு யூனிட் 5 ரூபாய் 10 பைசா என்ற விலையில் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தின்படி நீண்டகால அடிப்படையில் இந்த மின்சாரம் வாங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்ட வேண்டும் எனில் 2016-17ம் ஆண்டில் 1,200 மெகாவாட்டும், 2017-18-ல் 2,400 மெகாவாட் அளவும் சூரிய ஒளி மின்சாரம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in