பம்மலில் மர்ம காய்ச்சலால் சிறுமி பலி: பொதுமக்கள் சாலை மறியல்

பம்மலில் மர்ம காய்ச்சலால் சிறுமி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

பம்மலில் மர்ம காய்ச்சலால் சிறுமி இறந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் அடுத்த பம்மல் மூங்கில் ஏரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நேமத் துல்லா. ஆட்டோ ஓட்டுநரான இவர், வீடு வீடாக வாட்டார் கேன் சப்ளையும் செய்து வருகிறார். இவரது மகள் ஆஃபியா ஜாஸ்மின் (11), பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 27-ம் தேதி ஆஃபியா ஜாஸ்மினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்த்த னர். சிறுமியின் உடல்நிலை மோசமானதால் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத் துவர்கள், உடனடியாக உள் நோயாளியாக சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், 28-ம் தேதி இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஆஃபியா ஜாஸ்மின் உயிரிழந்தார். ரத்த தட்டணுக்கள் மிக வேகமாக குறைந்து வந்ததால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யவில்லை என்றும் ஆஃபியா ஜாஸ்மின் உறவினர்கள் கூறினர்.

இந்நிலையில், பம்மல் நகராட்சியைக் கண்டித்து 29-ம் தேதி பம்மல் பிரதான சாலையில் ஆஃபியா ஜாஸ்மின் உறவினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியல் செய்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பம்மல் நகராட்சி சுகாதார துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஏற்கெனவே மர்ம காய்ச்சலால் பொழிச்சலூரில் அக்கா - தம்பியான பாகிமா, முகமது, மணிமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (எ) ஐஸ்வர்யா (18) உயிரிழந்தனர். ஒரு மாதத்தில் மட்டும் 4 குழந்தைகள் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in