Last Updated : 02 Oct, 2016 09:52 AM

 

Published : 02 Oct 2016 09:52 AM
Last Updated : 02 Oct 2016 09:52 AM

காவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அணைகளின் நீர் நிர்வாகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டவுடன், காவிரி நதியின் குறுக்கேயுள்ள அனைத்து அணைகளின் நீர் நிர்வாகமும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்று பிறப்பிக்கப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டங்களை அடுத்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு 19-2-2013 அன்று இந்தத் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங் காற்று குழுவும் அமைக்கப்பட வேண்டும்.

காவிரி நீர் வழக்கு விசார ணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட் களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல் லாண்டு கால காவிரி நதி நீர் உரிமைப் போராட்டம் தீர்வினை நோக்கி மிக அருகே சென்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரமும், பொறுப்பும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங் கப்பட்டுள்ளது. இந்த வாரியத் துக்கு நீர் வள மேலாண்மையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள, தலைமைப் பொறியாளர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு வரை முழு நேரத் தலைவராக நியமிக்க வேண்டும். பாசன அணைகள் மேலாண்மையில் 15 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஒரு தலைமைப் பொறி யாளர், வேளாண் அறிவியல் துறையில் 15 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட ஒரு வேளாண் நிபுணர் என 2 பேர் வாரி யத்தின் முழு நேர உறுப்பினர் களாக நியமனம் செய்யப்பட வேண்டும்.

மத்திய நீர் வள அமைச்சகம் மற்றும் மத்திய வேளாண்மைத் துறையைச் சேர்ந்த 2 பேர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக நியமிக்கப் பட வேண்டும். இவர்கள் வாரி யத்தின் பகுதி நேர உறுப்பினர் களாக இருப்பார்கள். இவர்கள் தவிர தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் தலா ஒருவர் வீதம் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். காவிரி விவகாரத்துக்கு தொடர்பு இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த இயக்கு நர் அல்லது கண்காணிப்பு பொறி யாளர் அந்தஸ்துக்கு குறையாத ஒருவர் வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்படுவார்.

கர்நாடகத்தில் உள்ள ஹேமா வதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ண ராஜசாகர், தமிழ்நாட்டில் உள்ள கீழ்பவானி, அமராவதி, மேட்டூர் மற்றும் கேரளத்தில் உள்ள பனசுரசாகர் ஆகிய அணைகளின் நீர் நிர்வாகம் இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். பாசன ஆண்டு தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பாக தங்களுக்கு தேவையான நீரின் அளவு குறித்து ஒவ்வொரு மாநிலமும் வாரியத் துக்கு தெரியப்படுத்த வேண்டும். அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலத் துக்கான விகிதாச்சார அடிப் படையில் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்பதை வாரியம் முடிவு செய்யும்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு

காவிரி மேலாண்மை வாரியம் திறம்பட செயல்படும் வகையில், அந்த அமைப்புக்கு தேவையான தொழில்நுட்ப ரீதியான அனைத்து தகவல்களையும் வழங்க வேண் டிய கடமை காவிரி நீர் ஒழுங் காற்று குழுவுக்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்பட்டவுடன் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட வேண்டும்.

மேலாண்மை வாரியத்தில் முழு நேர உறுப்பினராக உள்ள பாசனப் பொறியாளர் ஒழுங்காற்று குழுவின் தலைவராக இருப்பார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி சார்பில் முது நிலை கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்துக்கு குறையாத வகை யில் தலா ஒரு பிரதிநிதி குழுவின் உறுப்பினராக இடம்பெறுவார். இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம், மத்திய வேளாண் அமைச்சகம் ஆகியவற் றின் சார்பில் தலா ஒருவர் உறுப்பி னர்களாக நியமிக்கப்படுவார்கள். வாரியத்தின் செயலாளர் ஒழுங் காற்று குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். வாரியத் தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒவ் வொரு மாநிலத்துக்கும் மாத வாரியான விகிதாச்சார அடிப்படை யில் கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்ய வேண்டும்.

பருவமழை காலங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறையாவது ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற வேண்டும். மற்ற நாட் களில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கூடலாம். அவசர சூழல் ஏற் படும்போது குழு உறுப்பினர் களுக்கு தெரியப்படுத்தி 48 மணி நேரத்துக்குள் குழுவின் கூட்டம் நடைபெற வேண்டும். கூட்டம் நடைபெற குறைந்தது 6 உறுப்பினர்களின் வருகை அவசியம். பற்றாக்குறை ஆண்டு களில் சம்பந்தப்பட்ட மாநிலங் களின் அணைகளில் உள்ள நீரின் இருப்பு குறித்து கண்காணிப்பு குழு வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலாண்மை வாரியக் கூட்டத் திலும், ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திலும் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அனைத்தும் பெரும் பான்மை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் எடுக் கப்படும். நீர் திறப்பு குறித்து வாரி யம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்ட ரீதியிலான கடமையாகும்.

தீர்வை நோக்கி காவிரி விவகாரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்டும் பல்லாண்டு கால சட்டப் போராட்டம் தீர்வின் மிக அருகே சென்றுள்ளதாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காவிரி டெல்டா நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது என்பது காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை தேடித்தரும் நட வடிக்கையாகும். மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அவசரகதியில் நியமனம் செய்யாமல், தகுதியான நிபுணர்களை அடையாளம் கண்டு நியமிப்பது மிகவும் அவசியமாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x