

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.