Published : 03 Aug 2022 07:19 AM
Last Updated : 03 Aug 2022 07:19 AM
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக வளிமண்டலத்தின் மத்திய பகுதியில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் நீட்சி (shear zone) நிகழ்கிறது. இப்பகுதி அடுத்து வரும் நாட்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 3-ம் தேதி (இன்று) அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை ஜூன் 1 முதல் இதுவரை தமிழகம், புதுச்சேரியில் 242 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமான மழை அளவான 125 மி.மீ. என்பதைவிட இது 94% அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT