

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தை சேர்ந்தவர்கள் தங்கும் வகையில், விருந்தினர் இல்லம் அமைக்க ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் ராபாக்கம் கிராமத்தில் 10 ஆயிரம் சதுரஅடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கியது.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாகாலாந்து முதல்வர் நிஃபியூ ரியோ கடிதம் எழுதிஉள்ளார். மேலும், மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர், ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.