லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் தின விழா: ஒழுக்கத்தை போதிக்கும் கல்விமுறை அவசியம்- உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் தின விழா: ஒழுக்கத்தை போதிக்கும் கல்விமுறை அவசியம்- உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
Updated on
1 min read

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் கல்விமுறை அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்தி செலமேஸ்வர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்தி செலமேஸ்வர் பேசிய தாவது:

கல்வியின் முக்கிய நோக்கம் நன்நெறிகளை கற்றுத் தருவதாக அமைய வேண்டும். படிக்கும்போது ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நமக்கு தெரியாது. கல்லூரி முடித்து வெளியேறிய பிறகுதான் அதனுடைய மதிப்பு தெரியும்.

மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை போதிக்கும் கல்விமுறை அவசியம். மேலும், ஒழுக்கம் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வரும் தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டும். ஒழுக்கம் இருந்தால் மட்டுமே வாழ்வில் உயரங்களை அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தரும் லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவருமான ஜி.விசுவநாதன் பேசும்போது, “நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் மேலான வழக்கு கள் தேங்கியுள்ளன.

தேக்கமடைந்துள்ள வழக்கு களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமானால் 70,000 நீதிபதிகள் தேவைப்படுகிறார்கள் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் குறிப்பிட்டி ருந்தார்.

ஆனால், நம் நாட்டில் இன்னும் பல நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.

ஆனால், தற்போது 10 லட் சம் பேருக்கு 18 நீதிபதிகள் மட்டுமே நம் நாட்டில் உள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை கருத்தில்கொண்டு மத்திய அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

விருதுகள்

முன்னதாக லயோலா கல்லூரி யின் முன்னாள் மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி களுமான டி.எஸ்.சிவஞானம், சி.டி.செல்வம், எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணா சீனிவாசன், பி.எஸ்.ராமன், விஜய் நாராயண், ஜோசப் கொடியன்தாரா ஆகி யோருக்கு விருதுகள் வழங் கப்பட்டன.

இந்த விழாவில் லயோலா கல்லூரியின் தலைவர் ஏ.எம்.ஜெயபதி பிரான்சிஸ், செயலர் லாசர், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இயக்குநர் ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in