உபரி மின்சாரம் விற்க மாநிலங்கள் இடையே பசுமை மின்வழித் தடத்தை நிறுவ வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

உபரி மின்சாரம் விற்க மாநிலங்கள் இடையே பசுமை மின்வழித் தடத்தை நிறுவ வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

உபரி காற்றாலை மின்சக்தியை விற்க ஏதுவாக மாநிலங்களுக்கு இடையிலான பசுமை மின்வழித் தடத்தை மத்திய அரசு விரைவில் நிறுவ வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுரங் கத் துறை அமைச்சர்கள் மாநாடு குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று உரை யாற்றினார். அவர் கூறியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டில் மின்பற் றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்பொழுது மின் உற்பத்தி யில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாது, மின்மிகை மாநில மாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டு களில் மாநில, மத்திய தொகுப்பில் புதிய மின் திட்டங்களை இயக்கத் துக்கு கொண்டுவந்தது, நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்த அடிப் படையில் மின்சாரத்தை கொள் முதல் செய்வது மற்றும் சூரிய மின்சக்தி மூலமாக கூடுதலாக 9,373 மெகாவாட் மின்சாரம் மின்கட் டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உச்சகட்ட மின்தேவையான 15,343 மெகாவாட் அளவையும், 346 மில்லியன் யூனிட் உச்ச மின் பயனீட்டு அளவையும் பூர்த்தி செய்துள்ளது. ஒருநாள் சராசரி மின்சார பயனீடு 2011-ல் 200 மில்லியன் யூனிட்டாக இருந்தது. 2016-ல் அது 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என்று தெரிகிறது.

தமிழகம் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிப்பதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,507 மெகாவாட், காற்றாலை மின்நிறுவு திறன் 7,668 மெகாவாட் பெற்று நாட்டிலேயே அதிக அளவு மரபுசாரா எரிசக்தி நிறுவு திறன் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. நாட்டின் காற்றாலை மொத்த மின் நிறுவு திறனில் தமிழகத்தின் நிறுவு திறன் 27 சதவீதம் ஆகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் கூடுத லாக 5,000 மெகாவாட் சூரிய மின் சக்தி, 4,500 மெகாவாட் காற்றாலை மின்சக்தி நிறுவப்படும். புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தேவைப்படும் பிற மாநிலங்களுக்கு உபரி காற்றாலை மின்சக்தியை விற்க ஏதுவாக மாநிலங்களுக்கு இடையிலான பசுமை மின்வழித் தடத்தை மத்திய அரசு விரைவில் நிறுவ வேண்டும்.

தமிழக மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத னால், செய்யூர் மின் திட்டத்தை விரைவில் நிறுவ ஏதுவாக ஒப்பந் தப் புள்ளிகள் கோருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் (எரிசக்தி துறை) ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் எம்.சாய்குமார் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in