வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொன்னேரி, வடசென்னை, மயிலாப்பூர், நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in