

உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக் குறிச்சி பகுதியில் ஊராட்சித் தலைவர் பதவி கோடிக்கணக் கில் ஏலம் விடப்பட்டது உள்ளிட்ட சில செய்திகள் வெளியா கின. இந்நிலையில் இது தொடர்பான எச்சரிக்கையை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரு கட்டங் களாக நடக்கிறது. மக்கள் வாக்களித்து, தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை, சில இடங்களில் ஏலம் விட்டு நிரப்ப உள்ளதாக செய்திகள் வருகின்றன. இத்தகைய சட்டத்துக்குப் புறம்பான ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கையை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணரச் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.