

சென்னை: ரயில் நிலைய விசாரணை மையங்களின் பெயர் “சஹ்யோக்” என்று மாற்றம் என்ற உத்தரவு இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் கடும் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது, இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்திய ரயில்வே அமைச்சர் தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.