சர்க்கரை ஆலைகள்: ரூ.2 ஆயிரம் கோடி பண பாக்கியை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சர்க்கரை ஆலைகள்: ரூ.2 ஆயிரம் கோடி பண பாக்கியை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
Updated on
1 min read

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி பண பாக்கியை வழங்கக்கோரி விவசாயிகள் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக் கம், ஈரோடு மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந் துரை விலையை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் முழுமையாக தரவில்லை. மாநில அரசு அறிவித்த விலையை தர முடியாது என கூறிவிட்டன. கரும்பு பண பாக்கியை தராத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2004-09 ஆண்டுகளில் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விவ சாயிகள் அனுப்பிய கரும்புக்கு தனியார் ஆலைகள் தர வேண்டிய லாபப் பங்கு தொகை ரூ.350 கோடியை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் ஆலை உரிமையாளர்கள் தர மறுக்கின்றனர். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையான ஆயிரத்து 650 கோடி ரூபாயை 15 சதவீத வட்டியுடன் மாநில அரசு பெற்றுத் தர வேண்டும்.

தஞ்சை மற்றும் பெரம்பலூரில் இயங்கி வரும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த கரும்புக்கு ரூ.95 கோடி பாக்கி வைத்துள்ளதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். மாநிலத்தில் இயங்கி வரும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 11 ஆலைகள் பாக்கி வைத்துள்ளன. இத்தொகையும் உடனடியாக வழங்க வேண்டும்.

நடப்பு 2016-17-ம் ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு விலையை உயர்த்தாமல் கடந்த ஆண்டு வழங்கிய விலையான டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மட்டும்தான் என அறிவித்து விவசாயிகளை வஞ்சித்து விட்டது. தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான அரவை தொடங்கிய பின்பும் இதுவரை கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவிக்காமல் உள்ளது. எனவே மாநில அரசு நடப்பாண்டுக்கு கரும்புக்கு பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி பண பாக்கியை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை இப்போராட்டம் தொடரும்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in