மதுரையில் பலத்த மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம்: அமைச்சர் தகவல்

அமைச்சர் பி.மூர்த்தி | கோப்புப் படம்
அமைச்சர் பி.மூர்த்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் கன மழையால் சேதமடைந்த வீடு உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என அமைச் சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. உசிலம்பட்டியில் மாநிலத்திலேயே அதிக அளவாக 230 மி.மீ. மழை ஒரே நாளில் பெய்துள்ளது. மேலூர், சிட்டம்பட்டி, வாடிப் பட்டி, சோழவந்தான் என பரவலாக மழை பெய்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதுடன் மரங்கள் விழுந்தன. கூரை, ஓட்டு வீடுகள் சேதடைந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கள்ளந்திரி பகுதிகளில் சேதமடைந்த வீடுகள், மின்கம்பங்களை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். வருவாய்த்துறை மூலமாக சேதமடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்து, நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளந்திரியில் கனமழையால் பகுதி சேதமடைந்த 7 வீடுகளுக்கு தலா ரூ.4,100 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாக சமுதாயக் கூடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் வழங்குவதற்கும், மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த பகுதிகளை கணக்கெடுப்பு செய்து நிவாரணப் பணி மேற் கொள்ளவும் ஆட்சியருக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in