டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா? - ரவீந்திரநாத் எம்பி கருத்து

எம்பி ரவீந்திரநாத் | கோப்புப் படம்
எம்பி ரவீந்திரநாத் | கோப்புப் படம்
Updated on
1 min read

ராஜபாளையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு இருக்கும் ஒரே எம்பி நான் தான். எனவே கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அதிமுக எம்பியாக பணியாற்றுகிறேன். தற்போது அனைத்து மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சி யில் எனது பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார். நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் இரண்டு வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே சந்திப்பு நடைபெறுமா என்பது தொண்டர்கள் மனநிலையை பொருத்தது, என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in