பட்டாபிராம் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் மீன் கடைகள் எரிந்து சேதம்

பட்டாபிராம் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் மீன் கடைகள் எரிந்து சேதம்
Updated on
1 min read

ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 கடைகளில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் எரிந்து நாசமாயின.

பட்டாபிராம் அடுத்துள்ளது தண்டூரை. இங்கு ஆவடி நகராட்சிக்கு சொந்தமான மீன் சந்தை உள்ளது. சந்தையின் மையப்பகுதியில், தண்டூரையை சேர்ந்த திமுக பிரமுகர் பழனி என்பவர் 3 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனைக்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்களை நேற்று முன்தினம் இருப்பு வைத்திருந்தார்.

இந்நிலையில் அன்றைய தினம் நள்ளிரவில் பழனி நடத்தி வரும் 3 கடைகள் மட்டும் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 3 கடைகளும் முழுவதும் எரிந்ததால் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள் சாம் பலாயின. இதுகுறித்து பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிந்து மின் கசிவால் தீப்பற்றி எரிந்ததா அல்லது மர்ம நபர்களால் எரிக்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in