

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களை விடுவிக்க கோரி, பள்ளி முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாலச்சந்திரன் (43), ராமகிருஷ்ணன் (46) ஆகியோர், தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மாணவியிடம் விசாரணை நடத்தி போலீஸாரிடம் புகார் அளித்தனர். கடந்த 29-ம் தேதி ஆசிரியர்கள் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீஸார் கைது செய்து, கோவைமகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி, பள்ளி முன்பு மாணவ,மாணவிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வால்பாறை டிஎஸ்பி கீர்த்திவாசன் மற்றும்போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி, உண்மை நிலவரம் அறிந்த பின்புநடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர்.