

தேனி மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உண்மை விசுவாசிகளுக்கு சீட் வழங்கப் படவில்லையென அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப் பினர்கள், 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர்கள், 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் போடி நகராட்சி துணைத் தலைவர் ஜி.வேலுமணி, சின் னமனூர் நகராட்சி துணைத் தலைவர் ஆர்.வேதநாயகம் உட்பட நகராட்சி 16 சிட்டிங் கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர சின்னமனூர் நகராட்சித் தலைவர் பி.சுரேஷ், கூடலூர் நகராட்சித் தலைவர் அருண்குமார் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 510 புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சிக்காக போராட் டத்தில் கலந்துகொண்டு பலமு றை சிறை சென்ற உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் கட்சித் தொண்டர்கள் சிலர் கூறியதாவது:
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்துக்கும், மாவட்ட செய லாளரும் எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வத்துக்கும் உட்கட்சி பூசல் இருந்து வந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் பூசல் சற்று குறைந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தல் மூலம் மீண்டும் அவர்களிடையே கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் சீட் வழங்கப்படவில்லை என்பது தான்.
மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் தேனி - அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 5 வார்டு களில், கடந்த வாரம் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூரில் வசிக்காமல் வெளி மாவட்டத்தில் தங்கியுள்ள நபர்களுக்கு வலுக்கட்டாயமாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். என முதல்வர் ஜெயலலிதா அறிவித் திருந்தார்.
ஆனால், தேனி மாவட்டத்தில் தங்கள் விருப்பம் போல் சீட் கொடுத்துள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், அவரை சந்திக்க முடியாத நிலை உள்ளது. அதனால் சென்னையில் தங்கியுள்ள அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து, இது தொடர்பாக முறையிட உள்ளோம். இதற்காக, நாளை சென்னை செல்லத் தயாராகி வரு கிறோம் என்றனர்.