வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பங்கேற்பு

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று முதல் தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in