ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இன்று ஆடிப்பூரத் தேரோட்டம்

ஆடிப்பூரத் திருவிழாவில் ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக ரங்கம் ரங்கநாதர் உடுத்திய பட்டு வஸ்திரம், மாலையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த  ரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள்.
ஆடிப்பூரத் திருவிழாவில் ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக ரங்கம் ரங்கநாதர் உடுத்திய பட்டு வஸ்திரம், மாலையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த ரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உடுத்திய பட்டு வஸ்திரம், பூமாலை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் என 2 ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரியது. இங்கு ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா ஜூன் 24-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5-ம் நாளில் பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் ஐந்து கருட சேவை உற்சவம், 7-ம் நாளில் சயன சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் வஸ்திரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

தேரோட்டத்தின்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சாற்றப்பட்ட வஸ்திரம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினரிடம், ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in