ஆக.7-ல் கருணாநிதி நினைவு நாளில் சென்னையில் நடக்கும் பன்னாட்டு மாரத்தான் போட்டி: 40 ஆயிரம் பேர் பங்கேற்பர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆக.7-ல் கருணாநிதி நினைவு நாளில் சென்னையில் நடக்கும் பன்னாட்டு மாரத்தான் போட்டி: 40 ஆயிரம் பேர் பங்கேற்பர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: 'கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி' ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இறுதிப் பதிவை வேளச்சேரியில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த்ரமேஷ், மண்டலக் குழுத் தலைவர்பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதியின் நினைவைப் போற்றும்வகையில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர்மாரத்தான் போட்டிக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

2020 ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற்றமாரத்தானில் 28 நாடுகளிலிருந்து 8,541வீரர்கள் பங்கேற்றனர். பதிவுக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டது. வசூல்தொகை ரூ.23,41,726 கரோனா பேரிடர்நிவாரண உதவி நிதியாக அளிக்கப்பட்டது. இப்போட்டி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.

தொடர்ந்து 2-வது ஆண்டில் மாரத்தான் போட்டி 2021 ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்றது. 38 நாடுகளிலிருந்து இம்மாரத்தான் போட்டியில் 19,596 பேர் பங்கேற்றனர். இதில் பெறப்பட்ட கட்டணத்தொகை ரூ.56,02,693 தமிழக முதல்வரிடம் கரோனா பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

தற்போது கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 3-ம்ஆண்டு மாரத்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நேரடியாக நடைபெறுவதால், 40 ஆயிரம் பேர் வரைஇதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இப்போட்டியும் ஆசிய சாதனையைப் படைக்க இருக்கிறது.

5, 10, 21, 42 கிமீ என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ரூ.1 லட்சம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நினைவு நாளில் இப்பரிசுகளை வழங்குகிறார்.

இப்போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை சென்று திரும்ப இருக்கிறது. 4 பிரிவுகளாக 40 ஆயிரம் பேர்பங்கேற்கும் இம்மாரத்தான் போட்டியில் ஓடுபவர்களை உற்சாகப்படுத்தி இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள்.

5 கிமீ போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மற்ற பிரிவு போட்டிகளை அமைச்சர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்தாண்டு கிடைக்கும் கட்டண வசூல் தொகை ரூ.90 லட்சம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் தாய் சேய்மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் கிராமப் புறங்களில் இருந்து வருகிற ஏழைத் தாய்மார்கள் பயன்பெறுகிற வகையில் அரங்கம் அமைப்பதற்கும், அறக்கட்டளை உருவாக்கி அதில் அந்த தொகையை பயன்படுத்துகிற வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத் துறைச் செயலாளரிடம் அதே மேடையில் ஒப்படைக்கவுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in