

ரூ.4.04 கோடியை வீட்டில் பதுக் கிய வழக்கில் என் மீது போலீ ஸார் பொய் வழக்கு பதிவு செய்து வாக்குமூலம் பெற்றுள் ளனர் என்று வருமான வரித் துறை அதிகாரிகளிடம் மோகனாம்பாள் தெரிவித்துள்ளார்.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் (55). காட் பாடி தாராபடவேடு பகுதியில் ஜமுனா என்பவர் வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாட கைக்கு குடியிருந்தார். அந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் மற்றும் 73 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள மோகனாம்பாளிடம் வரு மான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மோகனாம்பாளிடம் வரு மான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப் போது, ரூ.4 கோடி பணத்திற்கு கணக்கு கேட்டனர். அதற்கு மோகனாம்பாள், ‘‘கடந்த 25 ஆண்டுகளாக வட்டி தொழில் செய்துவருகிறேன். என்னி டம் பணம் கேட்டு வருபவர்க ளிடம் 2 ரூபாய், 3 ரூபாய் வட்டி வசூலிப்பேன். வட்டி யும் அசலையும் திருப்பி செலுத்த முடியாதவர்களின் சொத்துக்களை எனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொள்வேன். கடன் கொடுப் பதை பத்திரங்களில் எழுதி வாங்கிக்கொள்வேன். கடன் கொடுத்துவிட்டால் அந்த பத்திரங்களை கிழித்துவிடு வேன்’’ எவன்றும் கூறினார். போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை காவலில் எடுத்து பொய் வாக்குமூலம் பெற்ற னர். போலீஸார் கூறுவது போல செம்மரக் கடத்தல் கும்பலுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.